ගාලු දිසා චිත්ර කලා සංසදයේ ශිල්පීන් සමග දවසක්...
இன்று (21/12/2025) காலிக்குச் சென்றபோது, எதேச்சையாக பொதுப் பஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த ஒரு ART EXHIBITION சுவரொட்டி கண்களுக்குள் குத்தி நின்றது.
ගාලු දිසා චිත්ර කලා සංසදය ඉදිරිපත් කිරීමක්
ගාලු සිත්තම් 2025
දෙසැම්බර් 19, 20, 21
උදේ 9.00 – රාත්රී 7.00
ගාලු ක්රීඩා මණ්ඩප ශාලාවේදී...
என்றிருந்தது சுவரொட்டியில்.
இன்று கண்காட்சியின் கடைசிநாள் என்பதை அறிந்தவுடன்; நுழைவு இலவசம் என்றிருந்ததும் போன விடயம் ஒன்றாக இருக்க, அதைச் சற்றுத் தள்ளிவிட்டு விளையாட்டுத் திடலிற்குள் நுழைந்தேன்.
மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர், வௌியே இருவர் சித்திரம் வரைந்து கொண்டிருந்தார்கள். இருவரும் ஓவியர்கள். அவர்களில் ஒருவர் – சித்திரக் கலையில் பழம் சாப்பிட்டு விதை போட்டவர்.
அதே வெளிப்பகுதியில், காலி ரிச்மண்ட் (Richmond College) கல்லூரியைச் சேர்ந்த 10 (2026) தர மாணாக்கன் (KOWSHIKA) ஒருவனும் அழகிய ஓவியமொன்றை வரைந்து கொண்டிருந்தான்.

எதிர்காலம் நம்பிக்கை தரும் காட்சி.
அந்த மூத்த ஓவியர் மிகவும் சாந்தமானவர், கலை மணம் வீசுபவர். என்னோடு அன்புடன் உரையாடினார். சித்திரக் கலைக்குள் எத்தனை ஆண்டுகள் அவரது தனித்தன்மை என்று பல விடயங்கள் பேசினோம்.
பின்னர் என்னை உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளே…
சிங்கள ஓவியர்களினதும், சிற்பிகளினதும் ஆக்கங்கள் தனித்தனி அலகுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

கண்களைக் கவரும் ஓவியங்கள்…
ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்லர் என்பதைக்காட்டும் ஆக்கங்கள் அவை.
சிங்கள பண்பாடு, கலாசாரம் ஒவ்வொரு ஓவியத்திலும் துள்ளியமாய் தெரிந்தன.
சில ஓவியங்களில் பிகாசோ சாயலும் காணப்பட்டன. பல ஓவியர்கள் மனமுவந்து என்னிடம் வந்து, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்கள்.
அங்கிருந்த பல ஓவியங்களில் ஒருசில ஓவியங்களை மட்டுமே என்னால் காணொளியாகப் பதிவு செய்ய முடிந்தது.
“சித்திரமும் கைப்பழக்கம் – செந்தமிழும் நாப்பழக்கம்”
என்ற சான்றோர் மொழியின் அழகை உணர முடிந்தது.

இந்தக் கண்காட்சியில் இடம் பெற்ற
ஓவியங்கள் / சிற்பங்கள் இவர்களுடையன(அவர்கள் வழங்கிய துண்டுப்பிரசுரத்தின் அடிப்படையில்):
- ANURADHA MUTHUMALA අනුරාධා මුතුමාලා
- MALAN PREETHIRAJ මාලන් ප්රීතිරාජ්
- KULANWANSHA කුලවංශ
- DHANUSHKA DE ALWIS ධනුෂ්ක ද අල්විස්
- SUNETHRA DE SILVA සුනේත්රා ද සිල්වා
- DHAMMANI NAKANDALAGE ධම්මනි නාකන්දලාගේ
- PALITHA JAYASEKARA පාලිත ජයසේකර
- JAYAWEERA ජයවීර
- ANURA SHRINATH අනුර ශ්රීනාත්
- RUWAN MAHINDAPALA රුවන් මහින්දපාල
- WASANTHA SANATH වසන්ත සනත්
- HARSHA SAMARASINGHE හර්ෂ සමරසිංහ
- SANATH DHARMABANDU සනත් ධර්මබන්දු
- THISHANA RAJANAYAKA තිෂාන රාජනායක
- MANGALA MADANAYAKA මංගල මදනායක
- NIYUMI SISARANGIKA නියුමි සිසරංගිකා
- K.A. SUNIL SHANTHA සුනිල් ශාන්ත
- HARSHA DAMIAN හර්ෂ ධමියන්
- DESHAN RAJEEWA SAMARASIRI දේශාන් රජීව සමරසිරි
- K.D. KAMALPRIYA කමල්ප්රියා
(இன்று இறுதிநாள் என்பதால், சிலர் தங்களின் ஓவியங்களை ஏற்கனவே எடுத்துச் சென்றிருக்கக் கூடும்.)

இந்தக் கண்காட்சியில் எடுத்த காணொளிகள்
அடுத்தடுத்த நாட்களில் Reel-ஆக பகிரப்படும்…

கலைக்கு மொழி இல்லை…
அது மனங்களை இணைக்கும் ஒரு பொதுமொழி.
– தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்